காங்கிரஸின் ஜெராக்ஸ் காப்பிதான் ஆம்ஆத்மி… பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!!

Author: Babu Lakshmanan
16 February 2022, 5:52 pm

சண்டிகர் : பஞ்சாப்பில் காங்கிரஸ் கொள்ளையடிப்பதாகவும், ஆம்ஆத்மி ஊழல் செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பதான்கோட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது :- பஞ்சாப் மாநிலத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா சமயத்தில் கூட ஏழைகள் பசியில்லாமல் தூங்கும் வகையில் உணவுப் பொருட்களை வழங்கினோம்.

எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை காங்கிரஸ் அவமானப்படுத்தியது. பதன்கோட் தாக்குதலின் போது, நமது படைகள் மீது சந்தேகம் கூறி, காங்கிரஸ் தரம் தாழ்ந்து செயல்பட்டது. காங்கிரஸ் கட்சியின் ஜெராக்ஸ் காப்பிதான் ஆம்ஆத்மி கட்சி. பஞ்சாபில் காங்கிரஸ் கொள்ளையடித்தால், டெல்லியில் ஆம் ஆத்மி ஊழல் செய்கிறது.

ரிமோட் கண்ட்ரோல் குடும்பமான காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாப்பில் மக்கள் பிரியா விடை அளிக்க வேண்டும். உங்களுக்காக 5 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள். வேளாண்மை, வணிகம், தொழில் ஆகியவை லாபகரமாக மாறும் என நான் உறுதியளிக்கிறேன், எனக் கூறினார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!