பணத்திற்காக தாயை கைவிட்டவர் சித்து… தங்கை பகீர் குற்றச்சாட்டு.. பஞ்சாப் தேர்தலில் காங்கிரசுக்கு அதிர்ச்சி..!!!

Author: Babu Lakshmanan
28 January 2022, 7:15 pm

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து மீது அவரது தங்கை பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வரும் பிப்.,20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பகிளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மீது அமெரிக்காவில் உள்ள அவரது தங்கை பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது : – 1986ல் நவ்ஜோத் சிங் சித்து எங்களின் தந்தை இறந்தவுடன், தன்னையும், எனது தாயையும் கைவிட்டு விட்டார். இதனால், 1989ம் ஆண்டு எனது தாய் டெல்லி ரயில்நிலையத்தில் ஆதரவற்று இறந்து கிடந்தார். தனது 2 வயதில் தந்தை இறந்து விட்டதாக சித்து கூறுவது முற்றிலும் பொய். பணத்திற்காக அவர் எல்லோரையும் விட்டுவிட்டார், எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சித்து தரப்பில் இருந்து எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், சித்து மீது அவரது சகோதரியின் இந்தப் பரபரப்பு குற்றச்சாட்டு பஞ்சாப் அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 3044

    0

    0