பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா துப்பாக்கியால் சுட்டுக்கொலை… ஆம்ஆத்மி மீது குற்றம் சுமத்தும் காங்கிரஸ்..!!

Author: Babu Lakshmanan
30 May 2022, 8:35 pm

பஞ்சாப் : பஞ்சாப் பிரபல பாடகரும், அரசியல்வாதியுமான சித்து மூஸ்வாலாவின் உயிரிழப்புக்கு ஆம்ஆத்மி கட்சிதான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான சித்து மூஸ்வாலா நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மான்ஸா நகரில் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த சித்துவுன் மீது 30 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இத்தாக்குதலில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை கடந்த 26ம் தேதி ஆம் ஆத்மி அரசு வாபஸ் பெற்றது. பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட 3 நாட்களில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஆம்ஆத்மி கட்சியை கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது. இது அரசியல் படுகொலை என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தக்கொலை தொடர்பாக பஞ்சாப் டி.ஜி.பி. வீகே பவ்ரா கூறியதாவது:- பாடகர் கொலை தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். மேலும் கனடாவை சேர்ந்த லாரன்ஸ் பிஸ்னாய், பிரார் தாதா கும்பல் பேஸ்புக்கில் சில பதிவுகளில் இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க சிறப்பு படையினர் அமைக்கப்பட்டுள்ளனர், எனக் கூறினார்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 722

    0

    0