ராகுல், சோனியா காந்தி சென்ற விமானம் பாதி வழியில் அவசர அவசரமாக தரையிறக்கம்… என்னாச்சு?!!
Author: Udayachandran RadhaKrishnan18 July 2023, 9:45 pm
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி புறப்பட்ட நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பயணம் செய்த விமானம் மஅவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின் விமானத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி டெல்லி திரும்பினர். இவர்கள் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.