நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை தொண்டருக்கு கொடுத்தாரா ராகுல் காந்தி…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
7 February 2024, 10:49 am

நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு ராகுல் கொடுக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’யை கடந்த ஜனவரி 14ம் தேதி காங்கிரஸ் எம்.பி., ராகுல் துவங்கினார். தற்போது, ராகுலின் யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது. ராஞ்சியில் ராகுல் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில், காரின் மேற்புறத்தில் ராகுல் அமர்ந்திருந்தார். அவர் அருகே நாய் குட்டி ஒன்றும் இருந்தது. ராகுல் அந்த நாய்க்கு பிஸ்கட் கொடுத்தார். நாய் சாப்பிட மறுத்து விட்டது. இதையடுத்து, அந்த பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு கொடுக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை அதனுடைய உரிமையாளரிடம் கொடுத்து நாய்க்கு கொடுக்க சொன்னதாக ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!