டெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு, தொண்டர்கள் புடைசூழ பேரணியாக வந்து ஆஜரானார் ராகுல் காந்தி.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை, கடந்த 2010ம் ஆண்டு ‘யங் இந்தியா’ என்ற நிறுவனம் வாங்கியது. காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள இந்த நிறுவனம், நேஷனல் ஹெரால்டின் பங்குகளை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு குறித்து விசாரிக்க சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் சம்மன் அளித்திருந்தனர். ஜூன் 8ம் தேதி ஆஜராகும்படி சோனியாவுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள், அதற்கு முன்னர் ஆஜராக வேண்டும் என ராகுலுக்கும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று ஆஜராகினார். முன்னதாக, காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அங்கிருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பேரணியாக நடந்து வந்தார்.
அவருடன் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்தனர். அப்போது, போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தாண்டியும், உதைத்தும் அராஜகம் செய்தனர். சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் மீறி தொண்டர்கள் கோஷமிட்டபடி சென்றனர்.
டெல்லியில் பல இடங்களில் காங்கிரஸ் சார்பில் சர்ச்சைக்குரிய வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், ‛நான் சாவர்க்கர் அல்ல, ராகுல்’, ‛உண்மை வெல்லும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ராகுலுக்கு ‘சம்மன்’ அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுதும் அமலாக்கத் துறை அலுவலகங்கள் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.