ராகுல் காந்திக்கு அடுத்த நெருக்கடி… சாவர்க்கரின் பேரன் திடீர் போர்க்கொடி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2023, 12:51 pm

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. மேலும், ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அரசு பங்களாவில் இருந்து காலி செய்யும்படியும் ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, என் பெயர் சாவர்கர் அல்ல, என் பெயர் காந்தி. காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டார்’ என்று கூறினார்.

சாவர்கர் குறித்த ராகுல்காந்தியின் பேச்சுக்கு பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், மன்னிப்பு கேட்க நான் சாவர்கர் அல்ல என்று ராகுல்காந்தி கூறியது குறித்து சாவர்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சாவர்கரின் பேரின் கூறுகையில், தான் சாவர்கர் இல்லை என்பதால் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று ராகுல்காந்தி கூறினார்.

சாவர்கர் மன்னிப்பு கேட்டதற்கான ஆதாரத்தை காட்டும்படி ராகுல்காந்திக்கு நான் சவால் விடுகிறேன். அதேவேளை, சுப்ரீம் கோர்ட்டில் ராகுல்காந்தி 2 முறை மன்னிப்பு கேட்டுள்ளார். ராகுல்காந்தி செய்வது சிறுபிள்ளைதனமானது’ என்றார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!