ராஜினாமா செய்யும் ராகுல்.. உள்ளே வரும் பிரியங்கா : முற்றுப்புள்ளி வைத்த காங்கிரஸ்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2024, 8:21 pm

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

ஆனால், ராகுல் காந்தி இந்த இரு தொகுதிகளில் எந்த தொகுதியில் எம்பியாக தொடருவார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக தொடருவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அறிவித்துள்ளார்.

இதனால், வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்கிறார். இதைதொடர்ந்து, வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுசு் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம், பிரியங்கா காந்தி முதல்முறையாக கேரளாவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவு, அன்பு என்றும் மறக்க முடியாது என வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!