திடீரென ரிவர்ஸ் எடுத்த ரயில்.. நசுங்கிய ரயில்வே ஊழியர்!

Author: Hariharasudhan
9 November 2024, 6:38 pm

பீகாரில் ரயில் இன்ஜினை இணைக்க முயன்ற ரயில்வே ஊழியர் கப்ளிங்கில் சிக்கி உயிரிழந்தது குறித்து பரவுனி ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பரவுனி: பீகார் மாநிலம், பரவுனி சந்திப்பில் (Barauni Junction) உள்ள நடைமேடை எண் ஐந்தில், இன்று லக்னோ – பரவுனி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து உள்ளது. பின்னர், அதன் இன்ஜின் மற்றும் பெட்டிகளை இணைக்க பணி செய்து உள்ளனர்.

இந்த பணியில், சமாஸ்திபூர் மாவட்டம், தால்சிங்சாரை பகுதியைச் சேர்ந்த அமர் குமார் என்ற நபர் ஈடுபட்டு உள்ளார். இவ்வாறு அவர் கப்ளிங்கை இணைத்துக் கொண்டிருந்த போது, ரயில் முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக தவறுதலாக பின்னோக்கி வந்து உள்ளது.

Barauni Junction

இதனால், கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி உடல் நசுங்கிய அமர் குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டு உள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே அதிகாரிகள், உயிரிழந்த அமர் குமாரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

இதையும் படிங்க: திடீரென அண்ணனை பார்த்த தங்கை.. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம்!

மேலும், 35 வயதான அமர் குமார் கப்ளிங்கை கழற்றிக் கொண்டிருக்கும் போது ரயில் பெட்டிகள் மோதி உடல் நசுங்கு உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • S. J. Surya director comeback மீண்டும் இயக்குனராகும் பிரபல நடிகர் :10 வருட இடைவெளிக்கு பிறகு எடுத்த திடீர் முடிவு…!
  • Views: - 319

    0

    0