அன்ரிசர்வ் டிக்கெட்டில் ஏசி பயணம்.. இளைஞரைக் கொன்ற ரயில்வே ஊழியர்!

Author: Hariharasudhan
16 October 2024, 12:09 pm

பொதுப் பெட்டிக்கான டிக்கெட்டில் ஏசி கோச்சில் பயணம் செய்த காஞ்சிபுரம் இளைஞரை ரயில்வே ஊழியர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன் கோபி. 25 வயதாகும் இவர், கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தனது உறவினரைப் பார்ப்பதற்காக ரயில் பயணத்திற்கு திட்டமிட்டுள்ளார். இதன்படி, கடந்த அக்டோபர் 12ஆம் தேதி மங்களூரு-கொச்சுவேலி சிறப்பு ரயிலில் பொதுப் பெட்டியில் (Unreserved) பயணம் செய்வதற்கான டிக்கெட் பெற்றுள்ளார்.

ஆனால், அவர் பொதுப்பெட்டியில் பயணம் செய்யாமல், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். இந்த நிலையில், ரயில்வேயில் தனியார் ஏஜென்சி ஊழியராக பணிபுரிந்து வரும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனில் குமார் என்பவர் வழக்கமான டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அவர் ஏ.சி. பெட்டியில் உள்ள பயணிகளுக்கு தலையணை, போர்வை வழங்கி கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அவர் பொது டிக்கெட் வைத்துக் கொண்டு ஏ.சி. பெட்டியில் பயணித்த சரவணன் கோபியை கீழே இறங்குமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

AC Coach

பின்னர் நள்ளிரவு 11.15 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்போது, ஓடும் ரயிலில் இருந்து சரவணன் கோபியை அனில் குமார் கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் சரவணன் கோபி நடைபாதையில் விழாமல், நடைபாதையை ஒட்டி உள்ள தண்டவாளத்தில் விழுந்துள்ளார். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது ரயில் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனே ரயில் பயணிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்பு போலீசார், சரவணன் கோபியின் உடலை மீட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: 3வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை.. தனியார் கல்லூரியில் அதிர்ச்சி!

பின்னர், இதுதொடர்பாக பெண் பயணி ஒருவர் தந்த தகவலின்பேரில், 50 வயதாகும் அனில் குமாரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், சுரேஷ் கோபியை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொன்றதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, அனில் குமார் என்ற ஏஜென்சி ஊழியரை கைது செய்த ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ar rahuman marriage story மனைவியுடன் தேனிலவு… பக்கத்து அறையில் ஏ.ஆர்.ரகுமான்…!கூட‌ யார்?
  • Views: - 167

    0

    0