அந்தரத்தில் தொங்கும் ரயில்வே தண்டவாளம் : மின்னல் வேகத்தில் நடந்த புனரமைப்பு பணிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2024, 1:46 pm

தெலுங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்டத்தில் உள்ள இண்ட்டிகன்னேசமுத்திரம் அருகே நேற்று முன்தினம் மழை காரணமாக ரயில் பாதையில் அரிப்பு ஏற்பட்டு ரயில் தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியது.

இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. 36 மணி நேரத்தில் ரயில் தண்டவாளத்தை புணரமைத்த ரயில்வே அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தினர்.

சோதனை ஓட்டத்தில் ரயில் தண்டவாளம் போக்குவரத்திற்கு சரியாக இருப்பது தெரிய வந்தது.

எனவே இன்று மாலை முதல் விஜயவாடா- செகந்திராபாத் இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் போக்குவரத்தை மீண்டும் துவக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி