அரசு வேலை போய்விடும் என்ற அச்சம்… பெண் குழந்தையை கால்வாயில் வீசிய அரசு ஒப்பந்த ஊழியர்..!!
Author: Babu Lakshmanan24 January 2023, 11:00 am
அரசு வேலை போய்விடும் என்ற அச்சத்தில் அரசு ஒப்பந்த ஊழியர் தனது பெண் குழந்தையை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ஜவஹர்லால் மேக்வால் (36). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அவரது மனைவி 3வது முறையாக கர்ப்பமடைந்தார். அண்மையில் அவர்களுக்கு 3வதாக குழந்தை பிறந்துள்ளது.
ராஜஸ்தானில் மூன்றாவது குழந்தை பிறந்தவுடன் அரசு ஊழியர்கள் கட்டாய ஓய்வு பாலிசி அந்த மாநிலத்தில் உள்ளது. இதன்மூலம், மாநில அரசின் இரண்டு குழந்தைகள் திட்டத்தால் நிரந்தர வேலை பறிபோய் விடுமோ..? என்ற அச்சம் மேக்வாலுக்கு எழுந்துள்ளது.
மூன்றாவது குழந்தையால் தனது வேலையில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவரும், அவரது மனைவியும், ஐந்து மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசி உள்ளனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், தங்கள் மகளைக் கொன்ற வழக்கில் தம்பதியர் நேற்று கைது செய்துள்ளனர்.