ராஜஸ்தான் டூ பாகிஸ்தான்.. முகநூல் நண்பரை மணந்த இந்தியப் பெண் : கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2023, 1:04 pm

ராஜஸ்தான் டூ பாகிஸ்தான்.. முகநூல் நண்பரை மணந்த இந்தியப் பெண் : கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!!!

ராஜஸ்தான் அல்வார் மாவட்டத்தை சேர்ந்த 34 வயதான பெண் அஞ்சு ரபேல். இவருக்கு திருமணமாகி 5 வயது மகன் மற்றும் 4 வயதில் மகள் உள்ளனர்.

இந்தநிலையில் தனது முகநூல் நண்பரான நஸ்ருல்லா எனபவரை நேரில் சந்திக்க அவர் வசித்து வரும் பாகிஸ்தானுக்கு சென்றார். தன் வீட்டில் உள்ள கணவர், குழந்தைகள், தாய் தந்தை என யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டார்.

அஞ்சு பாகிஸ்தான் செல்வது பற்றி பல வதந்திகள் எழுந்தன. அவர் தனது முகநூல் நண்பரை 2வது திருமணம் செய்யத்தான் பாக்., செல்கிறார் என நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

இது பற்றி பேசிய நஸருல்லா, திருமணம் செய்யும் திட்டம் எங்களுக்கு இல்லை. அஞ்சு ஒரு மாத கால விசா முடிந்தததும் இந்தியா புறப்படுவார் என கூறியிருந்தார். ஆனால் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

இந்த திருமணம் கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி நடந்துள்ளது. அவர்களுடைய திருமணத்தை மேல்திர் மாவட்ட மூத்த காவல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த சம்பவத்தின் பிறகு அதிர்ச்சி அடைந்த அஞ்சுவின் தந்தை, “இரண்டு குழந்தைகளையும், கணவரையும் விட்டுவிட்டு அஞ்சு சென்ற விதம் கவலை அளிக்கிறது. தன் குழந்தைகளை நினைத்துக்கூட பார்க்கவில்லை. முதல் கணவரை விவாகரத்தாவது செய்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. குழந்தைகளின் எதிர்காலத்தினை அழித்த அஞ்சு என்னை பொறுத்தவரை உயிருடன் இல்லை” என்று கோபத்துடன் பேசி இருந்தார்.

இந்நிலையில்தான் அஞ்சு தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார். தன் குழந்தைகளைக்காண அஞ்சு இந்தியா சென்றுள்ளார் என நஸ்ருல்லாவும் பேசியுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்