பசுவதைக்கு எதிராக பேரணி… மாட்டிறைச்சி விட்டறவர்களை தாக்கிய பாஜகவினர்.. போலீஸ் குவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2024, 11:56 am
telangana
Quick Share

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பசு வதை தொடர்பாக பாஜகவின் இளைஞரணி சார்பில் பேரணி நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் பசுக்களை விற்று கறிக்கடைகளுக்கு அனுப்ப வைத்திருந்ததை பார்த்து அங்கு சென்று மீட்க முயன்றனர்.

இதனால் அங்கிருந்தவர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாஜகவை சேர்ந்த சிலர் காயமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டனர்.

இதனை அறிந்த பாஜகவினர் அங்கு திரண்டு முஸ்லீம் சமூகத்தினர் கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களும் திரண்டு பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த அடகு கடை வைத்திருக்கும் ஜெயின் சமூகத்தினரின் கடைகள் மீது தாக்குதல் நடத்தினர்.

இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் கடும் பதற்றம் ஏற்பட்டது. இருதரப்பினர் மோதலால் மேடக் நகரில் பதற்றம் ஏற்பட்டது. காவல் நிலையத்தை ஒரு தரப்பினர் முற்றுகையிட முயன்றதால் தனிப்படை மற்றும் ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டு மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

இரு குழுக்களும் போலீசில் புகார் அளித்தனர். இதனால் பாஜக, விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் இன்று மேடக் நகர பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஐ.ஜி. ரங்கநாத் மேடக் நகரில் நேரில் சென்று பார்வையிட்டு பேசுகையில்
மேடக்கில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பிற மாவட்டங்களில் இருந்து போலீஸ் படைகள் வரவழைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பொது மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பசுக்களைப் பாதுகாப்பதற்காக பிஜேஒய்எம் முற்றுகையிட்டதால் மோதல்கள் ஏற்பட்டதாகத் தங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

தகராறு செய்தவர்களை வெளியேறும்படி எச்சரித்தார். சண்டை தொடர்பான சில வீடியோக்கள் இருப்பதாகவும், அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். கத்தியால் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும், கலவரத்தை கட்டுப்படுத்துவதில் போலீசார் அலட்சியம் காட்டினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Views: - 104

0

0