ராமர் கோயில் கும்பாபிஷேகம்… சமயம் பார்த்து காங்கிரஸ் கட்சிக்கு பொறி வைத்த பாஜக : ட்விஸ்ட் வைத்த அமைப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2023, 4:39 pm

ராமர் கோயில் கும்பாபிஷேகம்… சமயம் பார்த்து காங்கிரஸ் கட்சிக்க பொறி வைத்த பாஜக : ட்விஸ்ட்!!

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்க்கட்சி தலைவர்களும் அடக்கம். இதில் ஒரு சில கட்சிகள் தாங்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றன. சில கட்சிகள் இது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் என கட்சி நிலைப்பாட்டை கூறாமல் இருந்து வருகின்றன.

அப்படி தான் காங்கிரஸ் கட்சி இன்னும் தெளிவாக எங்கள் கட்சியினர் கலந்துகொள்ள மாட்டார்கள் என கூறவில்லை. இதுகுறித்து கேரளா இஸ்லாமிய அரசியல் அமைப்பான கேரள ஜம்இய்யதுல் உலமா (Kerala Jamiyyathul Ulama ) எனும் சமஸ்தா (SAMASTHA)அமைப்பு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு ராமர் கோயில் விழா அழைப்பு வந்தது குறித்து அக்கட்சி செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் மழுப்பலாக பதில் கூறினார். அவர் கூறுகையில், ” கட்சியின் நிலைப்பாடு என்ன? ஜனவரி 22 அன்று, யார் பங்கேற்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அவர்கள் எங்களை அழைத்தார்கள். எங்களை அழைத்ததற்காக நாங்கள் அவர்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்து கொள்கிரோம் என தெரிவித்தார்.

இந்த நிலைப்பாடு குறித்து கேரள ஜம்இய்யதுல் உலமா (Kerala Jamiyyathul Ulama ) எனும் சமஸ்தா (SAMASTHA)அமைப்பு கூறுகையில், வட இந்தியாவில் இந்துக்களின் வாக்குகள் குறையக்கூடாது என விழாவில் பங்கேற்கலாம் என்பது காங்கிரஸ் நிலைப்பாடு. காங்கிரஸின் மென்மையான இந்துத்துவா அணுகுமுறைதான் 36 ஆண்டுகள் நாட்டை ஆண்ட அக்கட்சியை இந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யாவிட்டால், 2024 லோக்சபா தேர்தலிலும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும். சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் இப்படியான மோசமான ஒரு வரலாற்றில் இடம்பிடிக்கும். ராமர் கோயில் அழைப்பு என்பது பிஜேபி, காங்கிரசுக்கு வைத்த பொறி என்றும் கடுமையாக விமர்சிததது.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!