அரிய நிகழ்வு… சூரிய பகவான் பாதங்களில் விழுந்த சூரிய கதிர்கள் : அரசவல்லி கோவிலின் அற்புதக் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2022, 4:22 pm

ஆந்திரா : அரசவல்லி சூரிய பகவான் கோவிலில் சூரிய பகவானின் பாதங்களில் சூரியக்கதிர்கள் விழுந்த நிகழ்வை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அரசவல்லியில் சூரிய பகவான் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 9, 10 ஆகிய தேதிகளிலும் அக்டோபர் 8, 9,10 ஆகிய தேதிகளிலும் இந்த கோவிலில் உள்ள சூரிய பகவான் திருவடிகளில் சூரிய கதிர்கள் விழுவது வழக்கம்.

அந்தவகையில் இன்று சூரிய கதிர்கள் சூரிய பகவான் திருவடிகளில் விழுந்தன. நேற்று பருவநிலை காரணமாக இதுபோல் நடைபெறுவதில் தடை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் சற்று விரக்தி அடைந்தனர்.

ஆனால் இன்று எதிர்பார்த்தபடி சூரிய பகவானின் திருவடிகளில் சூரியக்கதிர்கள் விழுந்தன. இதனை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரசவல்லி கோவிலுக்கு வந்திருந்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1309

    0

    0