I.N.D.I.A. கூட்டணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… வெளியான ஒற்றை அறிவிப்பு… டக்கென பாஜக கூட்டணிக்கு தாவிய RLD…!!

Author: Babu Lakshmanan
9 February 2024, 7:15 pm

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு கட்சி வெளியேறியது அக்கூட்டணியிரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இண்டியா கூட்டணியில் இருந்து விலகினர். மேலும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இண்டிய கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளார்.

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தைச் ச்ந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சி இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறியது. அக்கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுதிரியின் தாத்தாவும், முன்னாள் பிரதமருமான சரண் சிங்கிற்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்த நிலையில், அவர் இண்டியா கூட்டணியில் இருந்து விலகி, பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இது இண்டியா கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 394

    0

    0