நகையை திருடிச் செல்லும் எலி… இது என்னடா புதுவிதமான திருட்டா இருக்கு..? வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
30 January 2023, 8:53 am

கேரளா : நகைக்கடையில் நள்ளிரவு புகுந்த எலி அங்கிருந்த நெக்லஸை இலாவகமாக தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது

கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் விற்பனைக்காக காட்சி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நெக்லெஸ் ஒன்று காணாமல் போயிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவு கடையின் சீலிங் வழியாக உள்ளே புகுந்த எலி ஒன்று அந்த நெக்லெஸ்-ஐ லாவகமாக வாயால் தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், நகையை திருடும் திருடனை கவனமாக பாருங்கள் என்ற வாசகத்துடன் எலி அந்த நெக்லெஸ்-ஐ தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!