ஆப்கான்., கிரிக்கெட் வீரர் ரஷித் கானுக்கு ரூ.10 கோடி பரிசளித்த ரத்தன் டாடா? ஊர் முழுக்க தம்பட்டம்.. வைரலாகும் ட்வீட்!!
Author: Udayachandran RadhaKrishnan30 October 2023, 7:23 pm
ஆப்கான்., கிரிக்கெட் வீரர் ரஷித் கானுக்கு ரூ.10 கோடி பரிசளித்த ரத்தன் டாடா? ஊர் முழுக்க தம்பட்டம்.. வைரலாகும் ட்வீட்!!
13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 22வது லீக் போட்டியில் பாக் மற்றும் ஆப்கான் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் பாக்., அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது. இந்த நிலையில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கான் வீரர் ரஷித் கானுக்கு ரத்தன் டாடா ரூ.10 கோடி பரிசுத் தொகை வழங்கியதாக செய்திகள் பரவியது.
இந்த நிலையில் இந்த தகவல் முற்றிலும் பொய் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். ஆப்கான் வீரருக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா உதவுவதாக நெட்டிசன்கள் கருத்து கூறியிருந்தனர்.
இந்த தகவலை மறுத்துள்ள ரத்தன் டாடா எனக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மக்கள் வாட்ஸ் அப்பில் வரும் தகவலை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனது X தளப் பதிவில், எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் வெகுமதி வழங்குவது பற்றி ஐ.சி.சி அல்லது எந்த கிரிக்கெட் கவுன்சிலுக்கும் நான் பரிந்துரை செய்யவில்லை. எனக்கு கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லை. எனது அதிகாரப்பூர்வ தளங்களை தவிர்த்து வரும் வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் மற்றும் வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம்.” என்று தொழிலதிபர் ரத்தன் டாடா பதிவிட்டுள்ளார்.