கழுகுகளுக்கு இரையாகிறதா ரத்தன் டாடா உடல்? ஆச்சரியமூட்டும் பார்சி கலாச்சாரம்!

Author: Hariharasudhan
10 October 2024, 5:39 pm

மும்பையில் நேற்று காலமான ரத்தன் டாடாவின் பார்சி கலாச்சாரப்படி, அவரது உடல் கழுகுகளுக்கு இரையாக மாறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மும்பை: இந்தியாவின் முன்னணி உற்பத்தி தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா நேற்று காலமானார். வயோதிக சாதாரண பரிசோதனைகளுக்காக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மாலை திடீரென அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, அவர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அவரது உடல், ரத்தன் டாடா சார்ந்த பார்சி கலாச்சார முறைப்படி இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. முன்னதாக, அவரது உடல் அரசு மரியாதை உடன் அவர் சார்ந்த குடும்ப வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. இந்த நிலையில், ரத்தன் டாடாவின் உடலுக்கு பார்சி வழக்கப்படி, பார்சி சமூக ஆன்மீக குருக்களால் முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.

Ratan Tata

முக்கியமாக, கி.பி.6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றிய பார்சி சமூகம் பழைய பெர்சியாவில் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. பின்னர், இந்தியாவிற்குள் நுழைந்த அச்சமூகம், தற்போது நாட்டில் சிறுபான்மையினமாக கருதப்படுகிறது. மேலும், இந்தியாவில் மிக கணிசமான எண்ணிக்கையிலே பார்சி சமூக மக்கள் வாழ்ந்து வந்தாலும், அவர்களது சமூக பங்களிப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது.

மேலும், பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்தால், அவரது உடல் இந்து, இஸ்லாம் முறைப்படி எரிக்கவோ அல்லது புதைக்கவோ செய்யப்படாது. மாறாக, அவர்களது இறந்த உடல் அதற்காகவே கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டடத்தின் உச்சியில் வைக்கப்பட்டு பறவைகளுக்கு இரையாகிறது. முக்கியமாக, கழுகுகளுக்கு உடல்கள் உணவாக மாறுகிறது. காரணம், பார்சி சமூக மக்களின் நம்பிக்கைபடி, மனிதன் இயற்கை கொடுத்த வரம், எனவே அவனை இயற்கையிடமே மீண்டும் ஒப்படைத்து விட வேண்டும் என சொல்லப்படுகிறது.

PARSI COMMUNITY

இதையும் படிங்க: ரத்தன் டாடாவுக்கு அடுத்தது யார்? காத்திருக்கும் வாரிசுகள்!

இதனால் தான் அவர்களது உடல் கழுகுகளுக்கு இரையாக்கப்படுகிறது. ஆனால், மாறி வரும் காலச்சூழலால் பார்சி சமூக மக்களின் இறந்த உடல்கள் மின்மயானங்கள் உள்ளிட்டவைகளில் இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…