சுப்பையா முதல் ஷாந்தனு வரை.. நாயுக்கும் சொத்து.. உயில் எழுதிவைத்த ரத்தன் டாடா!

Author: Hariharasudhan
25 October 2024, 7:37 pm

தனது சமையல்காரர் முதல் செல்லப்பிராணி வரை அனைவருக்கும் உயில் எழுதி வைத்துள்ளார் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா.

மும்பை: இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, கடந்த அக்டோபர் 9ஆம் தேதி வயோதிகம் மற்றும் சில வழக்கமான பரிசோதனைகளுக்காக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அன்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடல் ரத்தன் டாடா சார்ந்த பார்சி சமூக முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அவருடைய இளம் நண்பர் ஷாந்தனு நாயுடு முதல் வீட்டுப் பணியாளர் வரை அனைவருக்கும் கோடிக்கணக்கில் உயில் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் ரத்தன் டாடா.

முன்னதாக, அவர் கொலாபாவில் வசித்து வந்த வீடு 10 ஆயிரம் கோடி மதிப்புடையது. இது தவிர மும்பை ஜூகுதாரா சாலையில் இருக்கும் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, அலிபாக்கில் 2,000 சதுர அடி கொண்ட பீச் பங்களா, ரூ.350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83 சதவீத பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் பல்வேறு சொத்துக்கள் இருக்கிறது.

இதையும் படிங்க: ரத்தன் டாடாவின் நாய் இறந்துவிட்டதா? உண்மை என்ன?

இந்த நிலையில், தனது வளர்ப்பு நாய்களில் ஒன்றான ஜெர்மன் ஷெபர்டு வகையைச் சேர்ந்த ‘டிட்டோ’ என்ற நாயை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க உயிலில் சொத்து எழுதி வைத்திருக்கிறார். மேலும், ரத்தன் டாடாவிற்கு கடைசி வரை சமையல்காரராக இருந்த ராஜன் ஷா மற்றும் ரத்தன் டாடாவிற்கு சேவை செய்து வந்த பணியாளர் சுப்பையா ஆகியோருக்கும் தனது உயிலில் சொத்து எழுதி உள்ளார்.

TATA

இவர்களில் சுப்பையாவிற்கும், ரத்தன் டாடாவிற்கும் இடையே 30 ஆண்டு கால பந்தம் இருந்தது. ரத்தன் டாடா வெளிநாடுகளுக்குச் சென்றால் சுப்பையாவிற்கு உடைகள் வாங்கி வந்து கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

  • Mersal Film is Flop or hit Says Producer Hema Rukmani மெர்சல் படம் தோல்வியா? தயாரிப்பாளர் கொடுத்த ஷாக் பதில் : வெளியான வீடியோ!