பிரதமர் மோடி படம் எங்கே..? இலவச ரேஷன் அரிசி…. மாநில அரசின் பங்கு இவ்வளவுதான்.. சீறிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

Author: Babu Lakshmanan
3 September 2022, 11:43 am

தெலங்கானா ; தெலங்கானாவில் ரேஷன் கடையில் ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாவட்ட ஆட்சியர் ஒருவரை கேள்வி கனைகளால் துளைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள பேனரில் பிரதமர் மோடியின் படம் ஏன் இல்லை என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பட்டீலிடம், நிர்மலா சீதாராமன் கேட்டார். மேலும், அவர் கேட்ட பல கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் தெரியவில்லை என்று பதில் கூறினார்.

இதனால், கோபமடைந்த நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன், “ரேஷன் கடைகளில் மாதாமாதம் மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி ஒரு கிலோ சுமார் ரூ. 35 வரை இருக்கும். இதனை மக்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வாங்கி கொள்கின்றனர். இதில், ஒரு கிலோவுக்கு மாநில அரசு ரூ.3.30 மட்டுமே செலவு செய்கிறது. மீதமுள்ள ரூ.30.70 காசுகள் மத்திய அரசு செலவு செய்கிறது. போக்குவரத்து செலவை கூட மத்திய அரசே ஏற்கிறது. ஆனால், தெலங்கானாவில் இந்த அரிசியை மாநில அரசே மக்களுக்கு வழங்குவதாக கூறிக் கொள்கிறது.

கொரோனா சமயத்தில் மத்திய அரசு அரிசியை இலவசமாக வழங்கியது. ஆனால், இதுபற்றி எல்லாம் மாவட்ட ஆட்சியருக்கு ஒன்றுமே தெரியவில்லை. மாலைக்குள் ரேஷன் கடை முன்பு பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்க வேண்டும். இல்லையேல் நானே பேனர் வைப்பேன், என கூறினார். அவரது இந்தப் பேச்சை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 832

    0

    0