ராமனை அடித்து துவைத்த ராவணன்… ராம்லீலா நாடகத்தின் போது விபரீதம்.. (வீடியோ)!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2024, 5:17 pm

ராம்லீலா நாடகத்தின் போது ராமனை சரமாரியாக தாக்கிய ராவணின் வீடியோ வைரலாகி வருகிறது

உத்தரபிரதேசம் : அம்ரோகா மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற ராம்லீலா நாடகத்தில் ராமன் மற்றும் ராவணனாக நடித்த கலைஞர்கள் சண்டையிட்டனர்.

அதாவது ராமனுக்கு ராவணனுக்கும் இடையே போர் தொடங்கிய போது, இருவரும் அம்புகளை எய்து சண்டையிட்டனர். அப்போது ராவணனாக நடித்த நடிகர் ராமனாக நடித்தவரை தள்ளவிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ராமன், ராவணனுடன் சண்டையிட வருகிறார்.

இருவரும் மாறி மாறி சண்டை போட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!