நாடாளுமன்ற குழுத் தலைவராக மீண்டும் தேர்வு.. மோடி தலைமையிலான NDA கூட்டணி கூட்டத்தில் முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2024, 12:58 pm
Quick Share

மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் முக்கியநிலையாக, இன்று டெல்லியில் NDA கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியின் பெயரை நாடாளுமன்ற குழுத்தலைவர் (பிரதமர்) என்று ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். இதனை அடுத்து, அமித்ஷா வழிமொழிந்தார்.

மேலும் படிக்க: சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு.. பால் விநியோகம் முடங்கும் அபாயம் : திமுக அரசுக்கு பால் முகவர்கள் எச்சரிக்கை!

பின்னர் பேசிய நிதின் கட்கரியும் பிரதமர் மோடியின் பெயரை நாடாளுமன்ற குழு தலைவராக வழிமொழிந்தார். இதனை அடுத்து மற்ற அரசியல் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

Views: - 116

0

0