வயநாடு தொகுதிக்கு மீண்டும் தேர்தலா? எம்பி ராகுல் காந்திக்கு எதிராக உச்சநீதிமன்றம் படியேறிய வழக்கறிஞர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2023, 10:20 am

வயநாடு தொகுதிக்கு மீண்டும் தேர்தலா? எம்பி ராகுல் காந்திக்கு எதிராக உச்சநீதிமன்றம் படியேறிய வழக்கறிஞர்!!!

பிரதமர் நரேந்திர மோடி குறித்த அவதூறு கருத்துக்காக தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி, நீக்கம் செய்யப்பட்டது.

அவதூறு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 4-ந் தேதி நிறுத்திவைத்தது. அதையடுத்து ராகுல் காந்தியின் பதவிநீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிவிக்கை வெளியிட்டது. எனவே ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆனார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த அசோக் பாண்டே என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ராகுல் காந்தியை மீண்டும் எம்.பி.யாக அறிவிக்கும் அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், அவர் எம்.பி. பதவி வகிக்கும் வயநாடு தொகுதி காலியானதாக அறிவித்து, புதிதாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 309

    0

    0