ரசாயன ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து.. ஒருவர் பலி.. தொழிலாளர்கள் படுகாயம் : விசாரணைக்கு உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan17 July 2024, 1:31 pm
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனக்கா பள்ளியில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அங்குள்ள வசந்தா கெமிக்கல்ஸ் ரசாயன தொழிற்சாலையில் சற்று நேரத்திற்கு முன் பெரும் சப்தத்துடன் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு தீப்பற்றியது
அப்போது சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த நிலையில் தூக்கி வீசப்பட்டு ஒரு தொழிலாளி மரணம் அடைந்தார்.

மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். தொழிற்சாலை நிர்வாகம் படுகாயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரியாக்டர் வெடித்ததை தொடர்ந்து தொழிற்சாலையில் பற்றி சுமார் 40 அடி உயரத்திற்கு எரிந்த காரணத்தால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.