பிணவறையில் இறந்த உடலுடன் உறவு… தனியார் மருத்துவமனைகளில் கொடுமை… உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

கர்நாடகாவின் துமகூரு மாவட்டத்தில் 2015-ம் ஆண்டு 21 வயது இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் இறந்த அவரது உடலுடன் குற்றவாளி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.

இதன்பின்னர் நடந்த வழக்கு விசாரணையில், செசன்ஸ் கோர்ட்டு குற்றவாளிக்கு கொலை மற்றும் பலாத்கார குற்றச்சாட்டுகளின் கீழ் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவுக்கு எதிராக, கர்நாடக ஐகோர்ட்டில் குற்றவாளி மேல்முறையீடு செய்து உள்ளார்.

இதனை நீதிபதி விசாரணை மேற்கொண்டு, இரண்டு குற்றங்களுக்கான தீர்ப்பை உறுதி செய்து உள்ளார். இதன்பின்னர், டிவிஷன் பெஞ்சில் குற்றவாளி மேல்முறையீடு செய்து உள்ளார். அதில், கொலை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.

ஆனால், பலாத்கார குற்றச்சாட்டில் இருந்து அந்நபரை விடுவித்தது. அந்த நபர் இறந்த உடலுடன் உறவு கொண்டது இந்திய தண்டனை சட்டத்தின் எந்த பிரிவின் கீழும் குற்றச்செயல் ஆகாது என தெரிவித்தது.

கோர்ட்டின் இந்த உத்தரவால், இறந்த மனித உடலின் கண்ணியத்திற்கான உரிமை பற்றிய விவாதத்தில் சூடு கிளப்பி உள்ளது. இது ஒருபுறமிருக்க, கர்நாடக உயர்நீதிமன்றமானது, நம்ப முடியாத மற்றும் அதிர்ச்சியான விசயங்களை வெளிப்படுத்தி உள்ளது.

உயர்நீதிமன்றம் வெளியிட்ட தகவலில், பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பிணவறையில் வைக்கப்பட்டு இருக்கும் இறந்த உடல்களில், குறிப்பிடும்படியாக இளம்பெண் உடல்களுடன், அவற்றை பாதுகாக்க நியமிக்கப்பட்ட ஊழியர் பாலியல் உறவை வைத்து கொள்கிறார் என்ற தகவல் எங்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது என அதிர்ச்சி தெரிவித்தது.

இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் மாநில அரசு உறுதி செய்ய வேண்டிய உரிய தருணம் ஏற்பட்டு உள்ளது. இறந்த பெண்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

15 hours ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

16 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

18 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

19 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

20 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

21 hours ago

This website uses cookies.