ஒருபக்கம் மனைவி… மறுபக்கம் காதலி ; உச்சகட்ட விரக்தி… பேஸ்புக்கில் ரிப்போர்ட்டர் போட்ட பதிவு… பின்னர் நடந்த பகீர் சம்பவம்..!!!

Author: Babu Lakshmanan
12 August 2023, 6:35 pm

மனைவி மற்றும் காதலியின் நெருக்கடி தாங்க முடியாமல் ரிப்போர்ட்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. 45 வயதான இவர் தனியார் பத்திரிக்கை ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 21 வருடங்களுக்கு முன்பு கவுசல்யா என்பவருடன் திருமணமானது. இவருக்கும், மனைவி கவுசல்யாவுக்கும் எந்த நேரமும் சண்டை, சச்சரவாகவே இருந்து வந்துள்ளது.

இதனால், குடும்ப வாழ்க்கையில் வெறுப்புற்று இருந்த மிஸ்ராவுக்கு, பின்சி பெரேரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது. இந்த விஷயம் கவுசல்யாவுக்கு தெரிய வந்ததால், இருவருக்கும் இடையே சண்டை இன்னமும் அதிகமாகியுள்ளது.

அதேவேளையில், கள்ளக்காதலியான பின்சி பெரேராவும் மிஸ்ராவுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார். மனைவியும், காதலியும் இப்படி ஆளுக்கு ஒருபக்கம் சண்டை போட்டுக் கொண்டே இருந்ததால் மிஸ்ரா உச்சகட்ட மனவிரக்தியடைந்துள்ளார்.

நேற்று மதியம் கள்ளக்காதலி பெரேராவுடன் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு, வீட்டிற்கு சென்ற மிஸ்ரா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் மிஸ்ரா விரக்தியான பதிவு ஒன்றையும் போட்டுள்ளார். அதில், என் மனைவி கவுசல்யாவும், காதலி பின்சி பெரேராவும்தான் எனது மரணத்திற்கு காரணம் என்றும், இவர்கள் 2 பேரும் என்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய குழப்பம்தான் இந்த முடிவை எடுக்க வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தனது மனைவி கவுசல்யா எல்லா இடங்களிலும் என்னை அசிங்கப்படுத்தி, இழிவாக நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மனைவியை விவாகரத்து செய்ய பலமுறை நினைத்ததாகவும், என்னுடைய வயதான அம்மா, அப்பாவுக்காகவும், அவர்களின் மீதான மரியாதைக்காகவும், கவுசல்யா செய்யும் டார்ச்சரை எல்லாம் சகித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அவரை பிரிந்து வந்த பிறகு பின்சி பெரேராவுடன் தொடங்கிய எங்கள் வாழ்க்கை ஆரம்பத்தில் மிகவும் நன்றாக இருந்ததாகவும், ஒருகட்டத்தில், பெரேராவும், என் மனைவி கவுசல்யாவை பற்றி பேச ஆரம்பிக்க, எங்களுக்குள் சண்டை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டதாக விரக்தியுடன் கூறிய மிஸ்ரா, கவுசல்யாவும், பெரேராவும் என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டதாகவும், எனவே தற்கொலை செய்துகொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!