காணாமல் போன சிறுமி சோனாகாச்சியில் மீட்பு… பரபரப்பு சம்பவம்…பின்னணியில் முக்கியப் புள்ளிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2023, 5:34 pm

காதலிப்பதாக கூறி காதலனோடு சென்ற சிறுமியை சோனாகாச்சியில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரில் சோனாகாச்சி என்ற பகுதி சிவப்பு விளக்கு பகுதியாக அறியப்படுகிறது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சுந்தர்பன் பகுதியை சேர்ந்த சிறுமி, அதே மாவட்டத்தில் தோலாஹாட் பகுதியை சேர்ந்த சிறுவனுடன் பேஸ்புக் வழியே தொடர்புப்படுத்தி கொண்டார்.

இந்த தொடர்பு நாளடைவில் காதலாக மாறியது. சிறுமியை பேசி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்த சிறுவன், கொல்கத்தா நகருக்கு வரும்படி அழைத்து உள்ளான்.

திருமணம் செய்து கொண்டு வெளியே ஊர்சுற்ற போகலாம் என்றும் கூறியுள்ளான். இந்த நிலையில், திடீரென சிறுமியை காணவில்லை என கூறி சிறுமியின் தாயார் தோலாஹாட் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

உடனடியாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். முடிவில் கொல்கத்தாவில் உள்ள தர்மதல்லா நகரில் வைத்து சிறுமியை மீட்டனர்.

சிறுமியை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் அளித்த தகவலின்பேரில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் சிறுமியின் காதலர். ஜைதுல் ஷேக் என்ற மற்றொரு நபர் சிறுமியை விலைக்கு வாங்கியவர். அதன்பின் மெஹ்ரானா கட்டூன் என்ற தானியா என்ற பாலியல் தொழிலாளி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மெஹ்ரானா சிறுமியை விற்கும் ஒப்பந்தத்தில் டீலராக செயல்பட்டு உள்ளார். இந்த விவகாரத்தில், காவல் அதிகாரி பிஸ்வஜித் நஸ்கார் கூறும்போது, சிறுமியை கொல்கத்தாவுக்கு அழைத்து வந்த சிறுவன் பின்னர், ஹூக்ளியில் ஆரம்பாக் நகரில் உள்ள ஓட்டலில் ஜைதுல் ஷேக்கிடம் ரூ.40 ஆயிரம் பணம் பெற்று கொண்டு விற்றுள்ளான் என கூறியுள்ளார்.

இதன்பின்னர், ஆரம்பாக் ஓட்டல் மற்றும் பல்லிகஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தகவலை போலீசில் சிறுமி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, சிறுமியை சோனாகாச்சி சிவப்பு விளக்கு பகுதியில் விற்க ஜைதுல் தயாராகி உள்ளார். இந்த வழக்கில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில், ஷேக் மற்றும் மெஹ்ரானா கட்டூன் கைது செய்யப்பட்டனர்.

சிறுவர் சீர்திருத்த சட்டத்தின் கீழ் சிறுவனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!