சுரங்கத்தில் சிக்கி தவித்த தொழிலாளர்கள் மீட்பு… கவலை நிறைந்த கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாறியது.. நெகிழ வைத்த காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2023, 8:34 pm

சுரங்கத்தில் சிக்கி தவித்த தொழிலாளர்கள் மீட்பு… கவலை நிறைந்த கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாறியது!!

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர்காசி, சில்கியரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், மீட்பு படையினர் என பலர் 17 நாட்களாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு தடைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட அவர்களின் முயற்சிக்கு பலனாக தற்போது மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியது.

இந்நிலையில், சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பொருத்திய குழாய்க்குள் மீட்புக் குழு சென்று ஒருவரை மீட்டு கொண்டு வந்தனர். இன்னும் சில நிமிடங்களில் மற்ற தொழிலாளர்களை மீட்புக் குழு மீட்கப்படுவார்கள்.

உத்தரகண்ட் சுரங்க பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட உள்ளனர். சுரங்க விபத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி வழங்கி வருகிறது. தொழிலாளர்கள் மீட்கப்பட்டதை தொடங்க பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

மீட்கப்படும் தொழிலாளர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதற்காக தயார் நிலையில் 41 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுரங்கப்பாதையில் இருந்து ஒவ்வொரு தொழிலாளிகளையும் வெளியில் அழைத்து வர 5 நிமிடங்கள் ஆகிறது. சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களை முதல்வர் புஷ்கர் சிங் தாமி சந்தித்தார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 458

    0

    0