போர்க்களமாக மாறிய உணவகம்.. இருதரப்பினருக்குள் ஏற்பட்ட மோதல் : டீ மாஸ்டரின் மண்டையை உடைத்த கொடுமை.. பரபரப்பு காட்சிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2022, 4:24 pm

தெலுங்கானா : நிஜமாபாத்தில் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் டீ மாஸ்டரை அடித்து தாக்கி அட்டூழியம் செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் உள்ள ஆட்டோ நகரில் ரஜாக் ஹோட்டல் என்ற பெயரில் சிறிய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அங்கு டீ குடித்துக்கொண்டிருந்த போது குண்டர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இப்து என்பவனின் கூட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த இப்துவின் கூட்டாளிகள் 4 பேர் கட்டைகள், கற்கள் ஆகியவற்றால் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கு டீ மாஸ்டராக வேலை செய்யும் நபரை இழுத்து வந்து கட்டைகளாலும் கற்களாலும் கடுமையாக தாக்கி காயப்படுத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து ரவுடிகள் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1516

    0

    0