ஆர்கே ரோஜா எனும் நான்… ஜெயலலிதா பாணியில் அமைச்சராக பதவியேற்ற நடிகை : முதல்வருக்கு முத்தமழை பொழிந்து நெகிழ்ச்சி!!(வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 1:57 pm

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா இன்று அமராவதி சமீபத்திலுள்ள வெலகபுடியில் ஆந்திர அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஒட்டுமொத்த ஆந்திர அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த 11 பேர் உட்பட 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று அறிவித்தார்.

புதிய அமைச்சரவையில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் நடிகை ரோஜாவும் இடம்பிடித்துள்ளார். இந்தநிலையில் அமைச்சர்களுக்கு இன்று வெலகபுடியில் ஆந்திர ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

https://vimeo.com/698096466

நடிகை ரோஜா அமைச்சராக பதவியேற்ற பின் முதல்வர் ஜெகன்மோகன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். பின்னர் ஜெகன் மோகன் கைகளை பிடித்து முத்தமழை பொழிந்தார். நடிகை ரோஜா அமைச்சராக பதவியேற்ற போது தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோஷம் அரங்கத்தையே அதிர வைத்தது.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!