சாலையில் குளித்து, துவைத்து யோகா செய்த இளைஞர்… பதறியடித்து ஓடிய எம்எல்ஏ.. வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
8 August 2022, 7:29 pm

கேரள மாநிலம் மலப்புறத்தில் குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலையின் நடுவே தேங்கி கிடந்த  மழை நீரில் குளித்து, துவைத்து, தவம் செய்து தனது எதிர்ப்பை தெரிவித்த இளைஞரின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் இருந்து பாலக்காடு செல்லும் பிரதான சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்பட்டுள்ளது. சம்ந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

எனவே இதற்கு எதிர்ப்பு தெருவிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் புதுவிதமான போராட்டம் ஒன்றை மேற்கொண்டார். பாண்டிக்காடு பகுதியில் சாலையின் நடுவே உள்ள குழியில் தேங்கி கிடந்த மழைநீரில், அதே பகுதியை சார்ந்த கம்சா என்ற இளைஞர் பக்கெட், சோப், மக் உடன் வந்து, தேங்கி கிடந்த நீரில் துணிகளை துவைத்தும், குளித்தும், நீரில் நின்று தவம் செய்யவும் துவங்கியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் லதீப் என்பவர், சாலை உடனடியாக சரி செய்யப்படும் என உறுதி அளித்த பின்பு அந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலை நடுவே தேங்கிய மழை நீரில் விநோதமான முறையில் கவனத்தை ஈர்க்கும் விதமாக நூதன போராட்டத்தை நடத்திய இளைஞரின் செயல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 689

    0

    0