கேரள மாநிலம் மலப்புறத்தில் குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலையின் நடுவே தேங்கி கிடந்த மழை நீரில் குளித்து, துவைத்து, தவம் செய்து தனது எதிர்ப்பை தெரிவித்த இளைஞரின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் இருந்து பாலக்காடு செல்லும் பிரதான சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்பட்டுள்ளது. சம்ந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
எனவே இதற்கு எதிர்ப்பு தெருவிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் புதுவிதமான போராட்டம் ஒன்றை மேற்கொண்டார். பாண்டிக்காடு பகுதியில் சாலையின் நடுவே உள்ள குழியில் தேங்கி கிடந்த மழைநீரில், அதே பகுதியை சார்ந்த கம்சா என்ற இளைஞர் பக்கெட், சோப், மக் உடன் வந்து, தேங்கி கிடந்த நீரில் துணிகளை துவைத்தும், குளித்தும், நீரில் நின்று தவம் செய்யவும் துவங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் லதீப் என்பவர், சாலை உடனடியாக சரி செய்யப்படும் என உறுதி அளித்த பின்பு அந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலை நடுவே தேங்கிய மழை நீரில் விநோதமான முறையில் கவனத்தை ஈர்க்கும் விதமாக நூதன போராட்டத்தை நடத்திய இளைஞரின் செயல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.