கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.6.5 லட்சம் கொள்ளை : வங்கியில் துணிகரம்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2023, 3:47 pm

கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.6.5 லட்சம் கொள்ளை : வங்கியில் துணிகரம்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

வங்கியில் புகுந்த கொள்ளையன் கத்தியை காட்சி பணத்தை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள நரசாபுரம் வங்கியில் ஒருவர் தொப்பி அணிந்து முகத்தை காட்டாமல் கைக்குட்டை அணிந்து நுழைந்தார்.

அங்கிருந்த ஊழியர்களிடம் தங்க நகை கடன் வேண்டும் என்று கேட்டார், அப்போது வங்கி ஊழியர்கள் தங்க மதிப்பீட்டாளர் வெளியே சென்று சிறிது நேரம் காத்திருக்க கூறியுள்ளார்.

ஆனால்வெளியே செல்லாமல் அந்த அறையில் உள்ள சேரில் அமர்ந்துள்ளான். அப்போது ஊழியர்கள் மேஜை மீது பணத்தை வைத்து பேசிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்துக்கொண்டிருந்த கொள்ளையன் திடீரென தனது பையில் இருந்த கத்தியை வெளியே எடுத்து அங்கிருந்து ஊழியர்களை மிரட்டி மேஜையில் இருந்த 6.5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து மாயமாகினான்.

இதையடுத்து வங்கி ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?