சாலையில் உருண்டு விழுந்த பாறை…இளைஞர்கள் சென்ற பைக்கில் மோதி ஒருவர் பலி: hill ride சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்…பதைபதைக்க வைக்கும் வீடியோ!!

Author: Rajesh
29 April 2022, 1:55 pm

கோழிக்கோடு: தாமரைசேரி மலைப்பகுதியில் பைக் மீது பெரிய பாறை உருண்டு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள தாமரைசேரி மலைப்பகுதியில் மழைக் காலங்களில் நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இதுவரை பெரும் விபத்துகளோ, உயிரிழப்புகளோ இதுவரை ஏற்பட்டதில்லை. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில், மலப்புரம் வண்டூரை சேர்ந்த 6 இளைஞர்கள், 3 பைக்குகளில் மலப்புரம் செல்வதற்காக தாமரைசேரி வழியாக சென்றுள்ளனர். அதில் அபினவ் என்ற இளைஞர் மற்றொரு இளைஞருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென உருண்டு வந்த பாறை இவர்கள் சென்ற பைக்கின் மீது பயங்கரமாக மோதியதில் 2 பேரும் பள்ளதாக்கில் தூக்கி வீசப்பட்டனர். இதில், இளைஞர் அபினவ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…