அந்தரத்தில் நேருக்கு நேர் மோதிய ரோப்கார்கள்…நடுவழியில் சிக்கிய 50 பேரின் நிலை என்ன?: ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி துரிதம்..!!(வீடியோ)

Author: Rajesh
11 April 2022, 1:11 pm

ஜார்கண்ட்: பாபா பையத்யநாட் கோயிலில் அந்தரத்தில் ரோப்கார் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் நடுவழியில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துவ வருகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தின் டியோகர் மாவட்டத்தில் உள்ள பாபா பையத்யநாட் கோயிலில் ரோப்கார் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அந்தரத்தில் சென்று கொண்டிருந்த ரோப்கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து காரணமாக ரோப் கார்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. விபத்தில் சிக்கி இரண்டு பேர் பலியாகினர். மேலும் பத்து சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரோப் காரின் 12 கேபின்களில் சிக்கியுள்ளனர்.

இவர்களை பத்திரமாக மீட்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. கேபிள் கார்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதும் ரோப் காரில் இருந்து கீழே குதித்த தம்பதியினருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை துணை கமிஷ்னர் மஞ்சுநாத் பஜந்த்ரி மற்றும் எஸ்.ஐ. சுபாஷ் சந்திரா ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இந்தியாவின் மீிக நீண்ட செங்குத்தான ரோப்வே இது என கூறப்படும் நிலையில் இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரோப்பே பாபா பையத்யநாத் கோயிலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் நீளம் 766 மீட்டர்கள் ஆகும். மலைப்பகுதியில் மட்டும் 392 மீட்டர்கள் அதிகம் ஆகும்.

இந்த ரோப்வேயில் மொத்தம் 25 கேபின்கள் உள்ளன. ஒவ்வொரு கேபினிலும் நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும். விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

  • Nagarjuna akkineni Families Appreciates Sobhita Decision பொழைக்க தெரிஞ்ச புள்ள… சோபிதாவை கொண்டாடும் நாகர்ஜூனா குடும்பம்!