பிரதமர் மோடி மீது அவதூறு பரப்ப ரூ.100 கோடி பேரம்… பரபரப்பு புகார் : சிக்கலில் ஆளும்கட்சி…!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2024, 10:56 am
Modi
Quick Share

பிரதமர் மோடி மீது அவதூறு பரப்ப ரூ.100 கோடி பேரம்… பரபரப்பு புகார் : சிக்கலில் ஆளும்கட்சி…!!

கர்நாடகா ஹாசன் தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்பியும், அதே தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பல்வேறு பாலியல் குற்றசாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

தற்போது வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வலை பிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல, மஜத மூத்த தலைவர் எச்.டி.ரேவண்ணா மீதும் இதே போல பாலியல் குற்றசாட்டுகள் பதியப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார்.

இந்த வழக்கில், பாஜக பிரமுகர் தேவராஜே கவுடாவும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார்.

மேலும் படிக்க: கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.. இண்டி கூட்டணிக்கு படுதோல்வி உறுதி : அடித்து சொல்லும் வானதி சீனிவாசன்!

அவர் நேற்று ஹாசன் நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராக காவல்துறையினர் அழைத்து வந்த போது, இந்த பாலியல் குற்றசாட்டு வழக்கில், பிரதமர் மோடி, எச்.டி.குமாரசாமி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேச வேண்டும் எனவும், பாலியல் வீடீயோக்களை வெளியிட கூறியது குமாரசாமி என்று கூற வேண்டும் என்றும் டி.கே.சிவகுமார் 100 கோடி ரூபாய் பேரம் பேசினார் என்றும் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

மேலும் இந்த விவகாரத்தில், டி.கே.சிவகுமார், என்.சலுவராயசாமி, கிருஷ்ண பைரே கவுடா, பிரியங்க் கார்கே உள்ளிட்டோருக்கும் தொடர்பு உள்ளது என்றும், என்னிடம் 100 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டது.

5 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுப்பதாக கூறினார்கள். நான் அதனை மறுத்துவிட்டேன். அதனால் கைது செய்யப்பட்டுள்ளேன். நான் வெளியே வந்தால், பல உண்மைகள் வெளியே வரும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்றும் பாஜக பிரமுகர் தேவராஜே கவுடா தெரிவித்தார்.

Views: - 159

0

0