ரூ.1500 கோடி சொகுசு பங்களா GIFT : பணியாளருக்கு பரிசாக கொடுத்து அசத்திய முகேஷ் அம்பானி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2023, 9:46 pm

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. இவரது நீண்டகால பணியாளராக இருந்து வருபவர் மனோஜ் மோடி.

ரிலையன்ஸ் ஜியோ அண்டு ரீடெயிலின் இயக்குநராக உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நீண்டகால பணியாளரான மோடிக்கு, முகேஷ் அம்பானி விலையுயர்ந்த கட்டிடம் ஒன்றை தனது பரிசாக வழங்கி உள்ளார்.


மும்பையில் முக்கிய பகுதியில் அமைந்த நிபியான் கடல் சாலை பகுதியில் 22 தளங்கள் கொண்ட பிருந்தாவன் என பெயரிடப்பட்ட கட்டிடம் ஒன்று அமைந்து உள்ளது.

1500 கோடி ரூபாயில் இந்த கட்டிடம் அம்பானியால் மனோஜ் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில்தான் மகேஷ்வரி என பெயரிடப்பட்ட வீட்டில், ஜே.எஸ்.டபிள்யூ. குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரான சஜ்ஜன் ஜிண்டால் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்களில் முதன்மையானவராக இருந்தபோதும், தனது நீண்டகால பணியாளரும் பயன்பெறும் வகையில் விலையுயர்ந்த இந்த பரிசை வழங்கி பலரது பாராட்டுகளையும் பெற்று உள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!