ஏடிஎம்மில் இருந்து ரூ.24 லட்சம் அபேஸ்… கேஸ் கட்டர் வைத்து நூதனமாக கொள்ளையடித்த கும்பல்!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2024, 11:54 am

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலாவில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளது. இங்குள்ள இரண்டு ஏடிஎம் இயந்திரத்தில் அதிகாலை 3 மணி அளவில் வந்த கொள்ளையர்கள் கேஸ் கட்டர் கொண்டு கட் செய்து ₹ .24 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். தகவல் அறிந்த போலீசார் சிசிடிவி காட்சிகளில் திருட்டு காட்சிகள் பதிவாகியுள்ளதால் அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குடிப்பாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்பநாய் வரவழைத்தும் தடவியியல் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கிருந்து தமிழக எல்லையான வேலூர் அருகே என்பதால் கொள்ளையடித்த கும்பல் வேலூர் தப்பி சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்த மாவட்ட போலீசாருக்கு எச்சரிக்கை செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த திருட்டு வட மாநில கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் அதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி