ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் வழக்கு : அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு.. ‘க்ளீன் சீட்’ கொடுத்த போலீஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan24 April 2024, 8:24 pm
ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் வழக்கு : அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு.. க்ளீன் சீட் கொடுத்த போலீஸ்!!
மஹாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சி கடந்தாண்டு இரண்டாக உடைந்தது, அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.க கூட்டணி ஆதரவுடன் முதல்வராக உள்ள ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி அமைச்சரவையில் இணைந்தனர்.
துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றார். அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்., உண்மையான கட்சி என தேர்தல் ஆணையம் அறிவித்து கட்சி சின்னமான கடிகாரத்தையும் வழங்கியது.
சரத்பவார் கட்சி சரத்சந்திரபவார் என்ற பெயரில் உதயமானது.வரும் லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதி வேட்பாளராக சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து , அஜித்பவார் மனைவி சுனித்ரா பவாரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக சுனித்ரா பவார் மீது மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ. 25 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக கடந்த ஜனவரியில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் படிக்க: இந்திரா காந்தி கொடுத்த நகை.. அவரு மட்டுமல்ல : வயநாட்டில் BJP அண்ணாமலை சொன்ன விஷயம்!
இந்நிலையில் இந்த வழக்கில் சுனித்ரா பவார் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.