ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.27 லட்சம் அபேஸ்.. சிசிடிவி கேமராவுக்கே விபூதி அடித்த கில்லாடி கும்பல்!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2024, 6:42 pm

ஆந்திர மாநிலம் அனந்தபுத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் சனிக்கிழமை நள்ளிரவில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சி.சி.கேமிராக்களுக்கு கருப்பு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்து கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை கட் செய்து ₹ 27 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மேலும் ஏ.டி.எம்.மையத்தில் இருந்த கேமிரா ஹார்ட்டிஸ்கையும் கொண்டு சென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை, ஏடிஎம் திருடு போனதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

நான்காவது நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சுற்று பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!