பிரபல நடிகருக்கு ஆதரவாக அரசியல் என்ட்ரி கொடுத்த தொழிலதிபர்… வீடு மற்றும் வாகனங்களை சூறையாடிய ஆளும் கட்சியினர்… பதற்றம்!!

Author: Babu Lakshmanan
5 December 2022, 5:10 pm

கடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தொழில் அதிபர் வீடு மீது ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர் மாவட்டம் புங்கனூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கடந்த தேர்தலின் போது நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி வேட்பாளராக தொழிலதிபர் ராமச்சந்திர யாதவ் போட்டியிட்டார். அப்போது முதல் எதிர்க்கட்சியை சேர்ந்த பிரமுகர் என்ற வகையில் தன்னுடைய கட்சி சார்பில் அவர் அரசியல் நடத்தி வந்தார்.

இதனால் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், அவருக்கும் இடையே அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன.

இந்த நிலையில், நேற்று இரவு அவருடைய வீட்டுக்கு வந்த ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், ஜன்னல் கண்ணாடிகள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர்.

இது பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த புங்கனூர் போலீசார் வன்முறையில் ஈடுபட்ட ஆளுங்கட்சி தொண்டர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம் காரணமாக புங்கனூரில் பதட்டம் நிலவுகிறது. எனவே, புங்கனூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 557

    0

    0