எதிர்கட்சிக்கு தாவிய இரு ஆளும்கட்சி எம்எல்ஏக்கள்… அதிர்ச்சியில் முதலமைச்சர் ; மாநில அரசியலில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
16 December 2023, 9:33 am

ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் எதிர்கட்சிக்கு தாவிய சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் 6 மாதத்திற்குள் ஆந்திர சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, இப்போது, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சியுடன் நடிகர் பவன் கல்யாண் கூட்டணியை அறிவித்துள்ளார். அதேவேளையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இந்த முறையும் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக நிலைப்பாடு தெரியவில்லை.

ஆந்திராவில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் இரண்டு பேர் மற்றும் முன்னாள் எம்எல்சி உள்பட ஏராளமானோர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்துள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாட்டிகொண்டா தொகுதி எம்.எல்.ஏவான உண்டவல்லி தேவி, உதயகிரி எம்.எல்.ஏவான எம்.சந்திரசேகர ரெட்டி ஆகிய இருவரும் அமராவதியில் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர்.

மேலும், ஜெகன் கட்சியை சேர்ந்த முன்னாள் மேலவை உறுப்பினரான ராதாகிருஷ்ணய்யாவும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோருடன் ஊர்வலமாக வந்து தெலுங்குதேசம் கட்சியில் இணைந்தார். இது ஜெகன் மோகன் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • kochadaiiyaan movie rerelease soon in theatres ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…