ராகு, கேது பூஜை நடத்திய ரஷ்ய பக்தர்கள் : காளஹஸ்தி கோவிலில் பரிகார பூஜை நடத்தி சிறப்பு வழிபாடு..!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2022, 6:22 pm

காளகஸ்தி கோவிலில் 50க்கும் மேற்பட்ட ரஷ்ய பக்தர்கள் ராகு, கேது தோஷ நிவாரண பூஜை நடத்தி வழிபட்டனர்.

வாழ்க்கையில் தாங்கள் சந்திக்கும் இன்னல்கள், இடர்பாடுகள் ஆகியவற்றிற்கு முன் ஜென்ம வினைகள் மற்றும் நவக்கிரகங்களில் சுழற்சி ஆகியவையே காரணம் என்பது இந்துக்களின் அசைக்கு இயலாத நம்பிக்கை.

எனவே இந்துக்கள் தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், இடர்பாடுகள் ஆகியவற்றை களைய கோவில்களுக்கு சென்று பரிகார பூஜைகள் செய்து கொள்கின்றனர். மற்ற மதங்களை சேர்ந்தவர்களுக்கு இத்தகைய நம்பிக்கை கிடையாது.

ஆனால் ரஷ்யாவை சேர்ந்த சுமார் 50 பேர் இன்று காளஹஸ்தியில் உள்ள வாயு லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கு தினமும் நடத்தப்படும் ராகு, கேது தோஷ பரிகார பூஜைக்கு பணம் கட்டி டிக்கெட் வாங்கி அவர்கள் அனைவரும் பரிகார பூஜை செய்து கொண்டனர்.

பரிகார பூஜை செய்து கொள்வதற்காக கோவிலுக்கு வந்த அவர்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.

பரிகார பூஜை முடிந்த பின் அவர்கள் அனைவரும் கோவிலில் வாயுலிங்கேஸ்வரர், ஞானப்பிரசுன்னாம்பிகை நம்பிக்கை தாயார் ஆகியோரை வழிபட்டு திரும்பி சென்றனர்.

  • Sundar C requests Santhanam to return to comedy சந்தானத்திடம் அதை சொன்னா கோவப்படுவார்…சுந்தர் சி சொன்ன அறிய தகவல்..!