ஜோதி வடிவில் அருள்பாலித்தார் ஐயப்பன்… விண்ணை பிளந்த சரண கோஷம் ; லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!!

Author: Babu Lakshmanan
14 January 2023, 7:21 pm

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கட்டுங்கடங்காத அளவில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று நடந்தது. இதையொட்டி, மாலை 6.30 மணியளவில் பந்தள அரண்மனையில் இருந்து ஆபரண பெட்டியில் கொண்டு வரப்பட்ட தங்க ஆபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அப்போது, சபரிமலை பொன்னம்பல மேட்டில் சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். அப்போது, விண்ணை பிளக்கும் சரண கோஷங்களுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 497

    0

    0