மாசி மாத பூஜை: பிப்.12ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு…முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி..!!
Author: Rajesh8 February 2022, 8:44 am
திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.
மறுநாள் வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகளை நிறைவேற்றுவார்.
5 நாட்கள் நடைபெறும், சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு 17ம் தேதி இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின்னர் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படுகிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று தொடங்கியது.