சபரிமலையில் சர்ச்சையை கிளப்பிய வினோத பூஜை… ஜோதி தெரியும் இடத்தில் நடந்த பகீர் சம்பவம் ; தமிழக பக்தர்களால் சலசலப்பு..!!

Author: Babu Lakshmanan
16 May 2023, 2:24 pm

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து, விரதம் இருந்து கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

இந்த நிலையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பொன்னம்பலம்மேட்டில் அமர்ந்து சிலர் விஷேச பூஜைகளை செய்த வீடியோ சமூகவலைதளங்கில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பந்தல ராஜாவின் ஆபரணங்கள் எடுத்து வரப்பட்டு, ஐயப்பனுக்கு அதனை சாட்டி வழிபடும் போது, பொன்னம்பல மேட்டில் ஜோதியாக ஐயப்பன் காட்சி தருவார் என்பது இந்தக் கோவிலின் ஐதீகம். அப்படிபட்ட பொன்னம்பல மேட்டிற்கு கோவில் பூசாரிகளை தவிர்த்து, வேறு யாரும் எல்ல அனுமதி கிடையாது. அதோடு, வனவிலங்குகள் அதிகம் உள்ள இப்பகுதிக்கு, சாதாரண மக்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

இப்படியிருக்கையில், பொன்னம்பலம்மேட்டில் அமர்ந்து சிலர் விஷேச பூஜைகளை செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐயப்பன் கோவிலின் சம்பிரதாயங்களையும், மரபுகளையும் மீறிய செயல் என்றும், சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Courtesy : Media One

இதனிடையே, இந்தப் பூஜை நடக்கும் வீடியோ வைரலான நிலையில், அதில் இருந்த 5 பேரும் தமிழில் பேசிக் கொண்டிருப்பதால், தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 457

    0

    0