இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் : ‘பதான்’ பாடலில் காவி உடை.. சர்ச்சைக்கு பரபரப்பு பதில்!!
Author: Udayachandran RadhaKrishnan15 டிசம்பர் 2022, 9:35 மணி
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘பதான்’ திரைப்படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடலின் வீடியோ அண்மையில் வெளியானது. அதில் தீபிகா படுகோனே காவி நிற பிகினி ஆடையும், ஷாருக்கான் பச்சை நிற ஆடையும் அணிந்தவாறு டூயட் பாடுகின்றனர்.
இதனைச் சுட்டிக்காட்டிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, நடிகர்கள் தீபிகா, ஷாருக் அணிந்திருந்த ஆடை நிறத்தை சுட்டிக்காட்டி “காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார். இணையவெளியில் இது தொடர்பாக காரசார வாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தின் தலைவர் ராஜு தாஸ், “பாலிவுட், ஹாலிவுட் சினிமா துறைகள் தொடர்ந்து சனாதன தர்மத்தை பகடி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்து கடவுளரை அவமதிக்கின்றன. பதான் படத்தில் தீபிகா படுகோனே அணிந்துள்ள பிகினி உடையின் நிறம் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. அதுவும் ஷாருக்கான் தொடர்ந்து சனாதன தர்மத்தை எதிர்க்கிறார். காவி நிறத்தில் பிகினி அணிய வேண்டிய அவசியம் தான் என்ன?
வேண்டுமென்றே மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், மக்கள் இப்படத்தை புறக்கணிக்க வேண்டும். இந்தப் படம் எந்தெந்த திரையரங்குகளில் எல்லாம் திரையிடப்படுகிறதோ அவற்றையெல்லாம் தீயிட்டு கொளுத்த வேண்டும். இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கும் இதே தண்டனை தான் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
28வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கான் பேசியதாவது:- சமூக வலைதளங்கள் பல நேரங்களில் ஒரு பிற்போக்கு பார்வையோடு இயக்கப்படுகின்றன. இது மனிதனை கீழ்த்தரமாக சிந்திக்க வைக்கிறது.
என்னை சுற்றி என்ன நடந்தாலும் சரி, என்னைப்போன்றவர்கள் எப்போது பாசிடிவ்வாகவே இருப்பார்கள். எதிர்மறை சமூக ஊடக நுகர்வு ஊடகங்களில் வரும் எதிர்மறை கருத்துகள் என்னை ஒருபோதும் பாதிக்காது என்றார்.
பதான் பட பாடல் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1
0