தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் ஒரே SLOGAN.. விவசாயிகளுக்காக விஷால் செய்யும் காரியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2022, 6:57 pm

நடிகர் விஷாலின் லத்தி திரைப்படம் வரும் 22 ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், அதற்காக நடிகர் விஷால் படத்தை ப்ரொமோஷன் பணிகளுக்காக தமிழகம் மற்றும் ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் திருப்பதியில் உள்ள பிரபல கல்லூரி வளாகத்திற்கு வந்த அவர், லத்தி திரைப்பட டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் தலா ஒரு ரூபாயை விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக செலவு செய்வேன்.

சந்திரபாபு நாயுடுவை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்துள்ள குப்பம் தொகுதி மக்கள் மீது இருக்கும் அன்பு காரணமாக பொதுமக்களுக்கு உதவும் வகையில் கடந்த காலத்தில் உதவிகளை செய்தேன்.

ஆனால் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. ஏழைகளுக்கு உதவ மாணவர்கள் முன்வர வேண்டும் என பேசினார்.

திருச்சியில் லத்தி பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் லத்தி படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்து 1 ரூபாய் விவசாயிகளுக்கு தரப்படும் என அறிவித்திருந்த நிலையில் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற லத்தி திரைப்பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஷால் மீண்டும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…